BREAKING NEWS

பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.

பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குடிநீர் கழிவறை வசதி செய்யப்பட முடியவில்லை, எத்தனை முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 850 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி தேர்தலின் போது வாக்குப்பதிவு மையமாக செயல்பட்ட நிலையில் மின்சாரத்தை மாற்றி கொடுத்துள்ளனர் .

எதனால் அங்குள்ள ஒன்பது கட்டிடங்களில் ஒரு கட்டிடத்திற்கு மட்டுமே மின்னிணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டது மீதமுள்ள எட்டு கட்டிடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுப்பணி துறையின் மின்சார பராமரிப்பு அதிகாரிகளுக்கு பள்ளி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு பலமுறை தொலைபேசி வாயிலாகவும் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும் மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் பள்ளியில் குடிநீர் இணைப்பு செயல்படவில்லை மேலும் மாணவிகள் மட்டும் பயிலும் இந்த பள்ளியில் கழிவறையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இன்று புத்தகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் இடம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமதி லீலாவதி புகார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதன் பெயரில் கடை நிலை ஊழியர் ஒருவர் வந்து பார்த்துவிட்டு இது மின்சார பிரிவு அவர்களை வரச் சொல்கிறேன் என்று தெரிவித்து விட்டு அவரும் சென்று விட்டார். அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்

 

Share this…

CATEGORIES
TAGS