பழனியில் பஞ்சாமிர்தம் என்ற தலைப்பில் பரதநாட்டிய பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது.
பழனி தெற்கு ரத வீதி வாசவி மஹாலில் பழனி ஸ்கந்த சபாநாயகர் நாட்டிய சேத்ரா சார்பில் ஐந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயக்குனர் ராமலட்சுமி சுந்தரேசன் தலைமை வகித்தார். குரு நாட்டிய கலா விஷாரதா பானுமதி சுந்தரேசன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பஞ்சாமிர்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஐந்து எனும் கருப்பொருளில் பஞ்சமூர்த்தி, கௌத்துவம்,அஸம்யுத ஹஸ்தம் எனப்படும் ஐந்து விரல்களால் காட்டப்படும் முத்திரைகள், பஞ்சபூதம் பாடல்கள், ஐந்திணை, பஞ்சாட்சர ஸ்தோத்திரம், பஞ்சாமிர்த வண்ணம் எனும் பொருள்களில் நடனமாடி பார்வையாளர்களிடம் பாராட்டைப் பெற்றனர்.
நாட்டியத்தில் பிரபலமான ராமானுஜம் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களையும் பரிசு பொருட்களையும் வழங்கினார்.