பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா
பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது.
திருவிழா திருப்பலி பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று நோய்நொடி இன்றி நீடூடிவாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
மின் அலங்கார ஆடம்பர தேர்பவனி, வானவேடிக்கை, பேண்ட் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. புனிதர்கள் 3 வனத்துசின்னப்பர், ஆரோக்கியமாதா, அந்தோணியார் தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தது.இரவு முழுவதும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் இணை பங்குத்தந்தை தார்த்தீஸ், கிராம நாட்டாண்மைகள், இறைபணி ஊழியர்கள், பஞ்சாயத்தார்கள், கிராமவாசிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.