BREAKING NEWS

பிரபல கிரிக்கெட் வீரர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு?! ரசிகர்கள் அதிர்ச்சி!!!

பிரபல கிரிக்கெட் வீரர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு?! ரசிகர்கள் அதிர்ச்சி!!!

அம்ப்ராதி நாயுடு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. இவர், கடந்த 21 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய ஒரு நாள் அணியில் கடைசியாக 2016-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தார். பிறகு இடம் பெறாமல் இருந்தார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ராயுடு ஐபிஎல்லில் 187 ஆட்டங்களில் விளையாடி 29.28 சராசரியில் 4,187 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 127.26 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டையும் பெற்றுள்ளார், போட்டியில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.இந்நிலையில், ஐபிஎல் 2022 சீசன் தனது கடைசி சீசன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதவில், “இதுதான் எனது கடைசி சீசன் தொடர். 13 வருடங்களாக 2 சிறந்து அணியில்  விளையாடியது எனக்கு ஒரு அற்புதமான நேரமாக அமைந்தது. இந்த மகழ்ச்சியான பயணத்திற்கு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ஓய்வு குறித்து வெளியிட்ட ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )