“பிரபல ஹீரோவை இயக்குவது உண்மைதான்” -நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி
பிரபல ஹீரோவை இயக்குவது உண்மைதான்” -நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி.

பிரபல ஹீரோவை இயக்குவது உண்மைதான்” என்று நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்தார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்த படம், ’விநோதய சித்தம்’ . விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பவன் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். தம்பி ராமையா கேரக்டரில், பவனின் மருமகன் சாய் தரம் தேஜ் நடிக்கிறார். இந்தப் படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார்.

தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சமுத்திரக்கனி, முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான, மகேஷ்பாபுவின் ’சர்க்காரு வாரி பாட்டா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கில் படம் இயக்குவதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
