பேரணாம்பட்டில் வரட்டு கெளரவம் தேடும் ஒரு சில திமுகவினர்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா ?

பேரணாம்பட்டு ஏரிக்குத்தி ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் ஜாகீர். இவர் தன்னை ஊராட்சி மன்ற உறுப்பினர் என்று போடாமல் M.C.என்று போட்டுக் கொண்டு வரட்டு கெளரவம் தேடுகிறார்.
இதேபோல சின்னதாமல் செருவு ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் முத்தரசி. ஆனால் முத்தரசியின் கணவர் திமுக பிரமுகரான பாரதிராஜா என்பவர் சுவர் விளம்பரங்களில் தான் ஊராட்சி மன்ற உறுப்பினர் போல தனது மனைவியின் பெயரை மறைத்துவிட்டு தனது பெயரை ஊராட்சி மன்ற உறுப்பினர் என்று போட்டுக்கொண்டு ஊராட்சி மன்ற உறுப்பினரான முத்தரசியின் கணவர் பாரதிராஜாவும் வரட்டு கௌரவம் தேடுகிறார்.
பொதுவாக நகர மன்ற உறுப்பினர்கள்தான் M.C. என்று போட்டுக் கொள்வார்கள் . அது நடைமுறை சாத்தியமும் கூட .ஆனால் சாதாரண ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கும் ஜாகீர் தனது பெயருக்கு பின்னால் M.C.என்று போட்டுக் கொள்வது கேலிக் கூத்தான ஒரு விஷயமாகும். இது கண்டனத்திற்குரிய ஒரு விஷயம் ஆகும் என்று பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் மேற்கண்ட அந்த இருவரின் கோமாளித்தனத்தை கண்டு ஊரே கேலி செய்து கைகொட்டி சிரிப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே இது குறித்து வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் மேற்கண்ட இருவரையும் நேரில் அழைத்து.
இனி வரும் காலங்களில் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று அறிவுத்துவது நல்லது .இதற்கு மேலும் ஜாகீர் தனது பெயருக்கு பின் எம்.சி. என்று போட்டால் தேர்தல் கமிஷன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு நகர பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.