BREAKING NEWS

பைக் ரேஸ் இல் ஈடுபடுவதற்காக அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றிய இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல்

சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் இன்று பாராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் தேசிய நிலைத்தன்மை நிறுவனத்தின் தரவரிசை பட்டியலில் சென்னை எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2ஆம் இடம்பிடித்துள்ளதையொட்டி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தரவரிசைப்பட்டியலில் 2ஆம் இடம்பிடித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்ஜிஆர் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் கீதா லட்சுமி, “ஐக்கிய நாடுகளின் சார்பில் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கலாச்சாரம் மற்றும் பாடத்திட்டத்தில் அன்றாட நடவடிக்கைகளில் கற்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. இந்த பணிகளை எம்ஜிஆர் கல்வி நிறுவனம் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களைக் கொண்டு செய்து முடித்துள்ளது. 3 ஆண்டுகள் நடைபெற்ற இத்திட்டத்தின் மூலம் 10 கிராமங்கள், 15 பள்ளிகள் மற்றும் 15 குடியிருப்பு சங்கங்களின் மூலம் இத்திட்டல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் போது பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.

“மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகளை எம்ஜிஆர் கல்வி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த பணிகளின் அடிப்படையில் தற்போது தேசிய நிலைத்தன்மை நிறுவனத்தின் தரவரிசையில் எம்ஜிஆர் கல்வி நிறுவனம் 2ஆம் இடத்தை பிடித்திருக்கிறது”என்று தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிலைக்குழு உறுப்பினரும், மாணவருமான கிருஷ்ணா, “காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டும், புவி வெப்பமயமாதலை உணர்ந்தும் இந்தப் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். இதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

Share this…

CATEGORIES
TAGS