பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு பணிகள் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் மக்களை பாதுகாக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு பணிகள் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்
டெப்டி கமாண்டர் தலைமையில் இரண்டு காவல் ஆய்வாளர்களையும் இரண்டு உதவி ஆய்வாளர்களையும் மற்றும் 87 கமாண்டர்கள் மத்திய தொழிற்பாதுகாப்பு வீரர்கள் கொண்ட குழுவானது கனகவல்லிபுரம் பயிற்சி பள்ளியில் தங்கியுள்ளனர்
தற்போது 100 சதவீதம் வாக்குகளை அளிக்க வேண்டும் என்ற விதத்தில் 92 பேர் கொண்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் 30 பேர் கொண்ட தமிழ்நாடு காவலர்களும் இணைந்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் தொடங்கி ரயில் நிலையம் வரை தேர்தல் விழிப்புணர்வு அணி வகுப்பினை நடத்தினர்