மசிரிமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் காளி, கருப்பராயன் வேடமணிந்து நடனமாடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது
கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியில் அமைந்துள்ள மசிரிமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் காளி, கருப்பராயன் வேடமணிந்து நடனமாடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
கோபிசெட்டிபாளையம் புகழேந்திவீதியில் அமைந்துள்ள மசிரி மாரியம்மன் மற்றும் கருப்பராயன் திருக்கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் வெகு விம்சையாக கொண்டாடப்படும்,
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 16 ஆம் தேதி பூசட்டுதலுடன் துவங்கியது,அதனை தொடர்ந்து கம்பம் நடுதல்,சந்தனக்காப்பு அலங்காரம்,பட்டுபோர்த்தி ஆடுதல்,அம்மை அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
விழாவின் முக்கிய நாளன இன்று காலை மாவிளக்கு எடுதுவருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து கோபி சந்தியா வனதுறையிலிருந்து பால் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்.
இந்தவிழாவின்போது காளி மற்றும் கருப்பராயன் வேடம் அணிந்து நடனமாடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது,மேலும் உருமி அடித்து பாட்டுபாடி அம்மனை வரவேற்றனர்.