மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் மூதாட்டி
பிச்சை எடுக்கும் மூதாட்டியும் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்லாமல் அதிகாரியிடம் அடம் பிடிக்கும் சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணத்தில் மூதாட்டி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாதுகாப்பு இல்லத்துக்கு செல்வதற்கு மனமில்லாமல் அதிகாரிகளிடம் அடம்பிடித்து தொடர்ந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வரும் அவலம் நீடிக்கிறது .
உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.
அப்போது முதியவர்கள் சிலர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இதை கவனித்த ஆட்சியர் இவர்கள் எல்லோரையும் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்குமாறு வருவாய் மற்றும் சமூக நலத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து இன்று மாவட்ட சமூக பாதுகாப்பு நல துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 முதியவர்களை மீட்டு அரக்கோணம் அடுத்த மஞ்சம்பாடியில் உள்ள பாதுகாப்பு இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அதே நேரம் திருவள்ளூர் மாவட்டம் கே. ஜி. கண்டிகையைச் சேர்ந்த சகுந்தலா என்ற மூதாட்டியை பாதுகாப்பு இல்லத்துக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்தபோது அவர் அலறி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.
அது மட்டும் இன்றி அவர் மதுவுக்கு அடிமையானதால் பாதுகாப்பு இடத்துக்கு சென்றால் மது கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக அங்கிருந்து செல்லாமல் அதிகாரிகளிடம் தொடர்ந்து அடம்பிடித்தார் .
இதனால் அதிகாரிகள் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து சென்றனர். அதிகாரிகள் சற்று தொலைவு சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த மதுவை குடித்துவிட்டு ஜாலியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.https://youtu.be/3jq0-_zHryQ