BREAKING NEWS

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயணம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு….

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு நடை பயணம் மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய நடைபயணத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை கோட்டாட்சியர் யுரேகா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 8 கிலோமீட்டர் தூரம் சின்னக்கடை தெரு , தரங்கம்பாடி சாலை வழியாக பால் பண்ணை பகுதியில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி துவங்கிய இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நடைபயணம் முடிவடைகிறது.

Share this…

CATEGORIES
TAGS