மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பாட புத்தகங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக தேசிய கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர் பேசும் பொழுது கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆண்டு அதனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 38,43மயிலாடுதுறை மாவட்ட2 மாணவ மாணவிகளுக்கு வெளியில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருவதாகவும் இன்று மாலை பொழுது. அனைவருக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் நகர மன்ற தலைவர் செல்வராஜ்,முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி மற்றும்,பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.