BREAKING NEWS

மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்

மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்

தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் , மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.

இவ்விழாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 , 29 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தேர்ச்சி பெற்று , வருகின்ற ஜூன் மாதம் 26 முதல் 30 வரை மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சர்வதேச போட்டியில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழ்நாட்டின் சார்பாக பதக்கங்களை குவிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்ட கராத்தே மாஸ்டர்களுக்கு கராத்தே போட்டி நடுவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

தமிழ்நாடு கராத்தே பெடரேசன் தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கராத்தே பெடரேசன் பொறுப்பாளர்கள் வீரபாபு , வாசுதேவன் , ராமமூர்த்தி , கேரளா கராத்தே பெடரேசன் ரவி , இலங்கையிலிருந்து ஸ்டீபன் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து கராத்தே மாஸ்டர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS