மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்…

சங்ககிரி அருகேயுள்ள சண்முகா கல்லூரி மாணவ மாணவிகள் பயிலும் போதே பல்வேறு தொழில்நுட்பத்துறையில் பகுதி நேரபணி செய்து ஊதியம் பெரும் வகையில் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்…
சேலம் மாவட்டம் சங்ககரியில் செயல்பட்டு வரும் சண்முகா கல்வி நிறுவனத்தில் மலேசியா நாட்டின் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சரவணன் வருகை புரிந்து ஆக்கம் 360 என்கிற கல்வி மற்றும் தொழில்நுட்பம் குறித்து அமைக்கப்பட்ட நிறுவனங்களை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தார்..
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் சங்ககிரியில் செயல்பட்டு வரும் சண்முகா கல்வி நிறுவனங்களிலிருந்து மலேசியாவில் பிரபலமாக செயல்பட்டு வரும் எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மலேசியாவில் சென்று பயில்வதற்கும் மலேசியாவில் பயிலும் மாணவ மாணவிகள் இந்த சண்முகா கல்லூரியில் வந்து பயில்வதற்கும் தொடர்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் இருந்து ஒப்பந்தம் போடப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி, கலாச்சாரம் பற்றியும் பயிலும் போதேபகுதி நேர வேலை வாய்ப்பு ஏற்படுத்தி அதன் மூலம் ஊதியம் பெரும் வகையிலும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது சண்முகா கல்வி நிறுவனத்தின் மேலாளர் திருமூர்த்தி உட்பட பல்வேறு கல்வி மற்றும் தொழில நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் உடனிருந்தனர்.