BREAKING NEWS

மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என மு.க.ஸ்டாலின்

மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என  மு.க.ஸ்டாலின்

 

மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கட்சத்தீவு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நான் கொடுத்த மனுவை பிரதமர் மோடி பிரித்துக் கூட பார்க்கவில்லை. 10 ஆண்டில் பலமுறை இலங்கை சென்றவர் பேசாமல் இன்று பேசுவது ஏன்?

ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் கவலைப்படாதீர்கள். பாஜகவோடு கூட்டணியில் இருந்த போது சிறுபான்மையினரை முதுகில் குத்தியவர் எடப்பாடி இன்று தேர்தலுக்காக அக்கறை உள்ளது போல் நடிக்கிறார்

நம்முடைய காலை உணவு திட்டம் இன்றைக்கு உலகிற்கு முன்னோடியாக உள்ளது கனடாவில் அது அமல்படுத்தப்பட்டுள்ளது

தேர்தல் வந்தால் தான் தமிழகத்தில் சில பார்ட் டைம் அரசியல்வாதிகள் வருகிறார்கள் அவர்தான் மோடி

வீரத்தின் விலை நிலமான வேலூர் கோட்டைக்கு வந்திருக்கிறேன் தற்போது ஜனநாயகம் காக்க இரண்டாவது போருக்காக வந்திருக்கிறேன் – வேலூர் தேர்தல் பரப்பரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்த், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்

வீரத்தின் விலை நிலமான வேலூர் கோட்டைக்கு வந்திருக்கிறேன்.
தற்போது ஜனநாயகம் காக்க இரண்டாவது போருக்காக வந்திருக்கிறேன்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜகத்ரட்சகன் ஒரு திராவிட இயக்கத்தின் ஆழ்வார்.

திமுகவின் இடி, மின்னல், மழை என்ன போற்றப்பட்டவர்களில். மின்னல்தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள். கடந்த அறுபது ஆண்டு காலமாக கலைஞர் தலைவருக்கும் எனக்கும் ஒற்றுமை துணையாக இருக்கக்கூடிய அருமை அண்ணன் துரைமுருகனின் அருமை மகன்தான் தம்பி கதிர் ஆனந்த் அவர்கள். கடந்த தேர்தலில் வெற்றியை தடுக்க தேர்தலை தள்ளி போட்டார்கள் இருப்பினும் வெற்றி பெற்றார். இந்த முறையும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும்.

ஸ்டாலினின் தூதுவனாக நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும்.

என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் பரத்த கரகோஷம் எழுந்ததால் அதுவரை மேடையில் நின்று கொண்டிருந்த இரண்டு வேட்பாளர்களை பார்த்து
“உட்காருங்க சீட்டு கிடைத்துவிட்டது” என கூறினார்.

எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்றிணைவோம் வா என உங்களுக்கு துணையாக இருப்போம்.

ஆளு கட்சியாக இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி நீங்கள் நலமா? என உங்களோடு இருப்போம். என்றைக்கும் உங்களோடு இருக்கக்கூடியவன் நான் இந்த முத்துவின் கருணாநிதி ஸ்டாலின்.

தேர்தல் வந்ததால் தமிழகத்தில் சில பார்ட்டைம் அரசியல்வாதிகள் வருகிறார்கள் அவர்தான் பிரதமர் மோடி.
பொய்களையும், அவதூறுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு தேர்தல் சமயத்தில் மட்டும் வருகிறார். வெள்ளம் வந்தால் வர மாட்டார், சிறப்பு திட்டம் தர மாட்டார், நிதி கொடுக்க மாட்டார் இப்படி மக்களை ஏமாற்றி தமிழகத்திற்கு எதையும் செய்யாமல் துரோகம் செய்யும் பார்ட் டைம் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

நாட்டில் சர்வாதிகாரம் தலை தூக்கக்கூடாது, ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடக்கூடாது, சமூக நீதி காற்றில் பறக்கக் கூடாது, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் வாக்கு கேட்டு வருகிறேன்.

இந்திய கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும்.

தமிழ்நாட்டை வெறுக்கிற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மீது உண்மையான மதிப்பும், மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கிற தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பார். (இந்திய கூட்டணி பிரதமர் யார் என குறிப்பிடாமல் பேசிய மு க ஸ்டாலின்)

நாம் பெருமை கொள்ளக்கூடிய செய்தி இன்று காலை நான் பார்த்தேன், நம் திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக உள்ளது. இன்றைக்கு கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளார்கள். மதிய உணவு கொடுத்தால் பிள்ளைகள் படிப்பார்கள் என சிந்தித்த பெருந்தலைவர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.
நானும் சென்னையில் ஒரு குழந்தையை பார்த்து சாப்பிட்டியா எனக் கேட்டபோது அப்பா அம்மா வேலைக்கு செல்வதால் காலையில் உணவு செய்யவில்லை அதனால் சாப்பிடவில்லை என சொன்னது. நேராக கோட்டிற்கு போனவுடன் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தினேன்.
இன்று தமிழக முழுக்க 16 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளோம்.
மக்கள் விரோத அரசால் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும். தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டும், ஜிஎஸ்டி சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முதல் கிருஷ்ணகிரி ரயில் நிலையம் வரை புது ரயில் பாதை திட்டம் கொண்டுவரப்படும்.
பரதராமியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும், வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பட்டுக்கு கொண்டுவரப்படும், ஆற்காடு பகுதியில் அரசு கலைக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்லூரி, விளாபாக்கத்தில் கூட்டுறவு சங்கம், ஆகியுடன் நெமிலி ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும்.
நஹரி முதல் திண்டிவனம் வரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் கணக்கெடுப்பும் ஒரே நேரத்தில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை எடுக்கப்படும்.

இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்கும்மான உறவு என்பது இன்றைக்கு நேற்றுக்கு ஏற்பட்டது அல்ல. தலைவர் கலைஞர்,
அண்ணாவை இணைத்தது திருவாரூரில் நடைபெற்ற மிலாடி நபி விழாத்தான்.
இன்றைக்கும் பிரபலமாக உள்ள கல்லக்குடி கொண்ட பாடலை தந்தவர் நாகூர் அனிபா அவர்கள்.

1967 ல் திமுக ஆட்சி அமைக்க வரலாற்று சிறப்புமிக்க பேரறிஞர் அண்ணாவிற்கு பக்கபலமாக இருந்து திமுக வரலாற்றில் திருப்புமுனை ஏற்பட அடி கோலிட்டவர் கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள்.

பாஜகவோடு கூட்டணி இருந்த போது
சிறுபான்மை இன மக்களை முதுகில் குத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று கூட்டணியை விட்டு வெளியே வந்ததாக கூறி சிறுபான்மைய மீது அக்கறை உள்ளதாக கூறிக் கொள்கிறார்.
CAA க்கு அதிமுகவும், பாமகவும் ஓட்டு போட்டதால் தான் இந்தியாவுக்கு அந்த சட்டம் வந்தது. இவ்வளவு பெரிய துரோகத்தை செய்து விட்டு இன்றைக்கு தேர்தலை சந்திக்கிறார்கள்.
CAA வால் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறான் என அட்டாரி ஜெனரல் போல பாய்ண்ட் எல்லாம் பேசினார் எடப்பாடி .
இதை எதிர்த்துப் பேசிய என் மீதும் திருமா, டி.ஆ.பாலு, உதயநிதி ஆகிய எட்டாயிரம் பெரும் மீது வழக்கு போட்டார்கள்.
இதையெல்லாம் எதிர்த்து இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பினோம்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம். அப்போது ஒட்டுமொத்த உறுப்பினர்களுடன் அவையை விட்டு ஓடிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

ஜூன் நான்காம் தேதிக்குப் பிறகு சி ஏ ஏ ரத்து செய்யப்படும் கவலைப்படாதீர்கள்.
பச்சை துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார் எடப்பாடி.

ஆளும் கட்சியாக இருந்தால் மோடியை எதிர்ப்பேன் ஆனால் நாங்கள் எதிர்க்கட்சி என வியாக்கானம் பேசுகிறார்.
புலிப்பாண்டி எலி பாண்டியாக மாறி பாஜகவின் காலில் விழுந்து கிடந்தாரா?

இத்தனையும் செய்துவிட்டு கரகாட்டம் படத்தில் வருவது போல நாதஸ் திருந்திட்டான் அது மாதிரி இப்ப மாத்தி பேசிவிட்டு வாக்கு கேட்டு வருகிறார்..சொரணையும் சுயமரியாதையும் இல்லாதவர் எடப்பாடி.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழக உரிமைகளுக்காக திமுக உறுதியாக எதிர்க்கும்.
பாஜகவை எதிர்க்க வக்கில்லை. அதற்கு எதிர்க்கட்சி ஆளும் கட்சி என சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

விளம்பரத்திற்காக ஊருக்கு தகுந்த உடையை அணிவதைத்தான் சிறப்பாக செய்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அந்த ஊரையும், மக்களையும், பண்பாட்டையும், மொழியையும் மதிக்கிறாரா என்றால் இல்லை. அன்னை தமிழுக்கு கில்லி கூட தர மாட்டேன் என்கிறார் சமஸ்கிருதத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார்.

தேர்தல் ஆதாயம் அடைவதற்காக தான் தற்போது கட்சி தீவு பிரச்சனையில் பேசுகிறார். இது அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டது தேன்கூட்டில் கையை வைத்தது போல் பாஜக மாட்டிக் கொண்டு தவிக்கிறது. இந்த பத்து ஆண்டில் எத்தனை முறை பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் செய்தார் அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை திரும்ப கேட்டு இருக்கிறாரா? அப்போது எல்லாம் கச்சத் தீவு மோடி அவர்களின் கவனத்திற்கு வரவில்லை.

நேரு இந்திரா காலத்தில் நடந்தது ஞாபகம் இருக்கும் மோடிக்கு இரண்டு ஆண்டுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நியாபகம் இருக்கா?

2022 மே மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். ஜிஎஸ்டி விளக்கு தருணம், நீட்டுக்கு விளக்கு தருணம் என கோரிக்கை வைத்தேன். உறுதியாக நான் வைத்தது கச்ச தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அந்தக் கோரிக்கை மனுவையாவது நீங்கள் படித்து பார்த்தீர்களா?
தேர்தல் வருகிறது என்பதால் தங்களுக்கு ஏற்றார் போல் தகவலை மாற்றி கொடுக்கிறார்கள். ஆர்டிஐ மூலம் எப்படி தவறான தகவலை தந்தார்கள். வரலாறுலேயே இல்லாத அளவிற்கு கடந்த 10 ஆண்டில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, கைது நடந்ததை கண்டித்தாரா மோடி?

அருணாச்சல பிரதேசத்தில் சீனா பெயர் வைத்தது குறித்து பிரதமர் மோடி பேசினாரா?இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத் தீவு பத்தி பேசலாமா?

நீங்கள் போடுகிற நாடகம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் என எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தில் செய்யக்கூடாததையெல்லாம் செய்கிறார் மோடி.
தேர்தல் முடியும் வரை வருமான பரிந்துரை காங்கிரஸ் மீது கொடுத்த புகாரை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. டெல்லி முதல்வர், ஜார்கண்ட் முதல்வரை கைது செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பாஜக விரைவில் உணரும்.

சர்வாதிகாரப் போக்கு கொண்ட பாஜக அவர்களிடம் நீதி நேர்மை நியாயம் என எதையும் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து நீதிமன்றத்தை நாடுகிறோம்.

மாநில நிதி கொடுக்காததால்
நாமும் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் விரைவில் செய்தி வரும். நாளை மறுநாள் உச்சநீதி மன்றத்தில் நாமும் வழக்கு தொடர உள்ளோம். நீதிமன்றம் போலவே மக்கள் மன்றத்திலும் நியாய தீர்ப்பு எழுத வேண்டும்.

வேலூர் கோட்டையில் இருந்து எழக்கூடிய குரல் டெல்லி செங்கோட்டை வரை கேட்க வேண்டும் 40-ம் நமதே நாடும் நமதே என முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.

CATEGORIES
TAGS