BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்து 2017, 2018, 2019 ஆண்டு அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம்.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்து 2017, 2018, 2019 ஆண்டு அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 21.04. 2022 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இம்முகாம் நடக்கிறது. இதில் தேனி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னனி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் பங்கேற்க உள்ள பயற்சியாளர்கள் அவர்களது ஐடிஐ தேர்ச்சி சான்றிதழ், 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம். தொழிற் பழகுநர்களாக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரு 7, 700 முதல் 8, 050 வரை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் தரப்படும். மேலும் விபரத்திற்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தேனி என்ற முகவரி அல்லது 94999 37453, 88702 82856, 88387 19738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )