மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் அருகே முன்னாள் சென்ற லாரி மீது கார் பின்னால் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் பலி தாய் மற்றும் மகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில். அதே பகுதியில் மெடிகல் ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி யசோதா,
மகன் பிரகாஷ் மகள் சபி பிரபா ஆகியோருடன் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். காரினை செந்திலின் மகன் பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார்.

இவர்களது கார் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்ற சரக்கு லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் முன்பகுதி முழுவதும் அப்பளமாக நொறுங்கியது இதில் சம்பவ இடத்திலேயே மகன் பிரகாஷ் உயிரிழந்தார் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் செந்தில் உயிரிழந்தார்.

தாய் மற்றும் மகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
