BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சியில் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.

திருச்சியில் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.

திருச்சியில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய
31சதவீத அகவிலைப்படியை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்கக் கோரியும், அனைத்து நியாயவிலை கடைகளுக்கு புதிய விற்பனை முனையம் வழங்கக் கோரியும், மேலும், மோடம் மூலம் வழங்கப்பட்டு இணையதள சேவையை மேம்படுத்தப்பட வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்களை அரிசி உள்ளிட்ட பொட்டலமாக வழங்க கோரியும், ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளர் களுக்கு ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இதில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )