மாவட்ட செய்திகள்
தேனி அருகே மழையோடு அடித்த சூறாவளி காற்றால் கடை சேதம்.50 மீட்டருக்கும் அப்பால் தூக்கி எறியப்பட்ட. கடையின் தகர மேற்கூரை.

தேனி மாவட்டம் அன்னஞ்சி அருகே தேனி புதிய பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு தமிழ் புத்தாண்டு அன்று திறப்பு விழா காண இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் புதிய கடை சூறாவளியால் தேமடைந்தது. சேத மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் அதை ஊரைச் சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவர் தேனி அன்னஞ்சி பகுதியில் உள்ள அனுகிரஹா நகர் பகுதியில் புதிதாக தரை வாடகைக்கு இடம் வாங்கி உள்ளார்.
அதில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை நிலையம் துவங்க புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தகரத்தால் ஆன மேற்கூரை இரும்பு குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்தன.
தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி கடை திறக்க திட்டமிட்டு அதற்கான அழைப்பிதழும் அச்சிடப்பட்டு சுற்றம் மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் புதிதாக திறப்பு விழா காண இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கைவினை பொருள் விற்பனை நிலையத்தின் தாரத்தாலான மேற்கூரை நேற்று மாலை, தேனி சுற்று வட்டார பகுதிகளில் மழைபோடு அடித்த சூறாவளி காற்றால் தகர மேற்கூரை அனைத்தும் இரும்பு பைப்போடு பெயர்த்து 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தூக்கி எறியப்பட்டது. இரண்டு மின் கம்பங்களும் சேதமடைந்தன.
கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்கு தொழிலாளர்கள் கடைக்குள் இருந்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
அந்த புதிய கடையின் சேத மதிப்பீடு எட்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனவும், அரசு சார்பில் இழப்பீடு வழங்கி உதவவும் கடை உரிமையாளர் சுந்தரவடிவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
