மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா.

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று திருக்கோயில் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில், அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர் ஹேமலதா செல்வக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ராமமூர்த்தி, மற்றும் கிருஷ்ணா நகர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
