மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்த கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தலைமை மருத்துவர் அறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது அப்போது அந்த அறையில் யாரும் இல்லை இதனால் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சுகாதார பணியாளர் ஒருவர் கூறுகையில் . கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். தரமில்லாமல் கட்டப்பட்டதால் அடிக்கடி மேற்கூரை இடிந்து விழுகிறது. மேலும் கீழே பெயர்ந்து விழும் நேரத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த கட்டடங்களில் உடனடியாக சரி செய்யும் பணியை பொதுப்பணித்துறையினர் துவங்க வேண்டும் இல்லாவிட்டால் விபத்துகள் தொடர்ந்து நடக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
