மாவட்ட செய்திகள்
குற்றம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எஸ்பி பேட்டி.

குமரி மாவட்டத்தில் குற்றம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்து பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் கைப்பேசிகள் காணாமல் போனவர்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவைகளை மீட்டனர் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 111 செல்போன்கள் மீட்கப்பட்டன அந்த செல்போன்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தார் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக புதிய வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது கடந்த ஒரு வார காலத்தில் அறுபத்திமூன்று தகவல்கள் இந்த வாட்ஸ் அப்புக்கு வந்துள்ளது அதனடிப்படையில் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அவர் மாவட்டத்தில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு உள்ளதாகவும் இதற்காக காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மாவட்டத்தில் 150 கேமராக்கள் செயல்படாமல் உள்ளதாகவும் அதில் ஏழு கேமராக்கள் செயல்பட வைக்கப்பட்டுள்ளது என்றும் எஞ்சிய 143 கேமராக்களை செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
