BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் குத்தகை நிலுவைத் தொகை செலுத்தாத 33 கடைகளுக்கு சீல்.

தஞ்சாவூர் பர்மா பஜாரில் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தாத 33 கடைகளுக்கு நேற்று சீல் வைத்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தஞ்சாவூர் அண்ணா சாலை அருகே புதுப்பட்டினம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கழிவுநீர் வாய்க்கால் அருகே, 1984-ம் ஆண்டு பர்மாவிலிருந்து வந்தவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் விதமாக அவர்களுக்கு 20 சதுர அடி பரப்பளவில் 87 கடைகள் கட்டி குத்தகை அடிப்படையில் வருவாய்த்துறையினர் வழங்கினர்.
இந்த கடைவீதி பர்மா பஜார் என அழைக்கப்பட்டு அங்கு செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த கடைகள் நடத்தியவர்கள் வருவாய்த்துறையினருக்கு ஆண்டுதோறும் குத்தகை தொகை செலுத்தி வந்தனர்.
ஆனால் 33 கடைகாரர்கள் குத்தகை தொகையை பல காலம் செலுத்தவில்லை. இது தொடர்பாக பல முறை அவர்களுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும் குத்தகை தொகை செலுத்தவில்லை. இதில் ரூ.1.53 கோடி குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருந்ததால், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு சென்றது. அவரும் நிலுவைத் தொகையை வைத்துள்ள கடைகாரர்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ.1 லட்சத்தை செலுத்தி உடனடியாக வருவாய்த்துறையினர் நடவடிக்கையிலிருந்து மீள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆனாலும் கடைகாரர்கள் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.
இதையடுத்து நேற்று தஞ்சாவூர் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு, குத்தகை தொகையின் நிலுவையை செலுத்தாக 33 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கையை எடுத்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )