மாவட்ட செய்திகள்
ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க கோரி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.


ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும், அது தொடர்பான சட்டம் இயற்ற வலியுறுத்தியும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நேற்று மாலை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கழகத்தின் மாவட்டத் தலைவர் சி.முதல்வன் தலைமை வகித்தார். செயல் தலைவர் டி.சுப்ரமணியம் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட அமைப்புச் செயலாளர் அ.க.வடிவேல், மாவட்ட செயலாளர் ந.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில், பள்ளி மாணவர்கள் நடத்தையில் ஏற்படும் விரும்பதகாத மாற்றங்கள், ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதும் அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டு, மாணவர்களாலும், சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.

இவ்வாறான செயல்களினால் பள்ளி ஆசிரியர்கள் மனவேதனையோடும், மன உளைச்சளோடும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களை நெறிபடுத்தவும், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், ஆசிரியர்களின் பணிபாதுகாப்புக்கும், மாணவர்களை நெறிப்படுத்தவும் புதிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
