மாவட்ட செய்திகள்
பூட்டின் வீட்டை உடைத்து இரண்டு லட்ச ரூபாய் நகை கொள்ளை – 24 மணி நேரத்தில் சுற்றி வளைத்த காவல்துறையினர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காட்டூர், பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன் மனைவி உமாமகேஸ்வரி, என்பவர் கடந்த
14ம் தேதி காலை சுப்புரமணியபுரத்தில் உள்ள சுகாதாரதுறை
அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று
பணியில் இருந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த
போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவை திறந்து அதில் இருந்த
சுமார் 9.74 பவுன் தங்க நகை மற்றும்
2ஜோடி வெள்ளி கொழுசுகள், (மொத்த மதிப்பு
1,80,000/-) ஆகியவற்றை மர்ம
நபர் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து உமாமகேஸ்வரி
திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து
திருவெறும்பூர்
காவல்ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்த நிலையில் நேற்று காலை
திருவெறும்பூர் பேரூந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான
நின்று இருந்த அவரை அழைத்து விசாரணை செய்தபோது அவருக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில்
திருச்சி, செம்பட்டு, புதுத் தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகன்
ஆன்ட்ரூஸ் (54)
என்பதும் இரண்டு நாளைக்கு முன்பு கொள்ளையில் இடப்பட்டது அவர்தான் என்பதும்
தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் கொள்ளையடித்து சென்ற நகைகளை காவல்துறை மீட்டனர்.
இதனையடுத்து அவரை திருச்சி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.