BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வ.உ.சி 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நகரும் புகைப்பட கண்காட்சியை வ.உ.சி மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வ.உ.சி யின் சுதந்திர போராட்ட பங்களிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கி கூறினார்.
செக்கு இழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நகரும் புகைப்பட கண்காட்சி தஞ்சை தெற்கலங்கம் மாநகராட்சி பள்ளியில் இருந்து புறப்பட்டது.

கண்காட்சியில் வ.உ.சி மார்பளவு சிலை, அவர் பயன்படுத்திய கப்பல், ஆங்கிலேயர்களுடன் கலந்துரையாடல், வ.உ.சி உருவம் பொறித்த தபால்தலை சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பு குறித்த அரிய புகைப்படங்கள், குறிப்புகள் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

கண்காட்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கண்காட்சியில் இடம் பெற்று இருந்த வ.உ.சி மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தார். இக்கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வ.உ.சி யின் சுதந்திர போராட்ட பங்களிப்பு குறித்து விளக்கி கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )