BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வடமதுரை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சொத்துவரி வீட்டுவரி காலி மனை பட்டா வரி விதித்ததை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் 4 பேர் கருப்பு சேலை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் கருப்பு சேலை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் 10 ஆண்டுகளாக எந்த ஒரு சொத்துவரி வீட்டுவரி நடத்தப்படாத நிலையில் திமுக பொறுப்பேற்ற பத்து மாதத்தில் வீட்டு வரி சொத்து வரி என பல்வேறு வரி விதிப்பு மற்றும் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப் பேரவையில் காலி மனை பட்டாவுக்கும் வரி விதித்ததை கண்டித்து அதிமுகவின் கவுன்சிலர்கள் 4 பேர் கருப்புச் சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் இந்த வரி உயர்வால் அப்பாவி ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )