மாவட்ட செய்திகள்
திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையம் காவிரி ஆற்று கரையில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சி சர்க்கார் பாளையம் நடு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி வயது 78 இவர் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியர் ஆவார்.
இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடன் பிரச்சினை காரணமாக சுந்தரமூர்த்தி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே சர்க்கார் பாளையம் காவிரி ஆற்றின் கரையில் மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது.


இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது இறந்தவர் சுந்தரமூர்த்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
