BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

எங்களுக்கு மதுக்கடை வேண்டாம் சத்துவாச்சாரி மகளிர் ஆட்சியரிடம் மனு…அகற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உத்தரவாதம்!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதி குறிஞ்சி நகர் பகுதி மகளிர் எங்கள் பகுதிக்கு மதுக்கடை வேண்டாம், உடனடியாக அகற்ற உத்தரவிடுங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஏற்கெனெவே இப்பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்லும் பெண்களும் அப்பகுதியின் வழியாகத்தான் செல்ல வேண்டி இருப்பதால் பச்துகாப்பற்ற சூழல் இருப்பதாக அப்பகுதி பெண்கள் சில தினங்களுக்கு முன் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுப்பிரியர்கள் இப்பகுதியில் எங்களுக்கு கடை வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுப்ட்ட பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருத்தும் இன்னமும் அதே இடத்தில் மதுக்கடை இயங்கி வருவதால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் எங்களுக்கு அப்பகுதியில் மதுக்கடை வேண்டாம் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆட்சியர் குமரவேல்பாண்டியனிடம் இதுகுறித்து புகார் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்,. அவர்களின் கோரிக்கையை கேட்ட கலெக்டர் உடனடியாக மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )