மாவட்ட செய்திகள்
சித்தையன் கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சொத்துவரி, வீட்டுவரி ,காலி மனை பட்டா வரி விதித்ததை கண்டித்து அதிமுக 16ஆவது வார்டு கவுன்சிலர் கோவிந்தசாமி கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது . இதில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அதிமுக கவுன்சிலர் கருப்பு சட்டை அணிந்து வெளி நடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் 10 ஆண்டுகளாக எந்த ஒரு சொத்துவரியும், வீட்டுவரியும் உயர்த்தப்படாத நிலையில் திமுக பொறுப்பேற்ற பத்து மாதத்தில் வீட்டு வரி, சொத்து வரி என பல்வேறு வரி விதிப்பு மற்றும் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப் பேரவையில் காலி மனை பட்டாவுக்கும் வரி விதித்ததை கண்டித்து அதிமுகவின் 16ஆவது வார்டு கவுன்சிலர் P.கோவிந்தசாமி கருப்புச் சட்டை அணிந்து வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் இந்த வரி உயர்வால் அப்பாவி ஏழை ,எளிய மக்கள் பாதிக்கப் படுவதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
