BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நாளை முதல் மீண்டும் சென்னை ஷீரடி ரயில் சேவை துவக்கம்!

சூப்பர் நியூஸ்! நாளை முதல் மீண்டும் சென்னையிலிருந்து ஷீரடிக்கு ரயில் சேவை துவங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 வருடங்களாக மக்களின் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது . தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் கொரோனாவுக்கு முந்தைய கால அட்டவணைப்படி ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சென்னையிலிருந்து ஷீரடிக்குச் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.


இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. நாளை ஏப்ரல் 13ம் தேதி முதல் வாராந்திர ரயில் சேவையாக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சாய் நகர் ஷீரடி வரை செல்லும் ரயில் சேவை தொடங்கப்படும்.ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 10.20க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.25க்கு ஷீரடி சென்றடையும்.அதே போல் ஷீரடியில் வெள்ளிக்கிழமை காலை 8.25 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு அடுத்தநாள் 9.30 மணிக்கு வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது அனைத்து ரயில்வே முன்பதிவு மையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி தளத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.இது தவிர கோடை கால சிறப்பு ரயில் சேவைகளாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சில பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் ரயில்வேயில் அனுப்பப்படும் பார்சல்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )