BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஏப்ரல் 19ம் தேதி பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட கலெக்டர்!!

திருச்சியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 முதல் 11.30க்குள் அம்மன் திருத்தேரில் எழுந்தருளுகிறார்.

அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் “திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். அதே நேரத்தில் தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். இந்த விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 30ம் தேதி சனிக்கிழமை முழுவதும் பணி நாளாக செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )