மாவட்ட செய்திகள்
தஞ்சையில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பெரும் கற்களை அடுக்கி வழியை மறித்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீழவஸ்தாசாவடி சர்வீஸ் சாலையின் குறுக்கே மிகப் பெரிய கற்களை கொண்டு சாலை தடுக்கப்பட்டுள்ளது கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த மீன் சந்தை தொடர்ந்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில் மீன் வியாபாரிகள் வசதிக்காக சாலையின் குறுக்கே வழியை கற்களைக் கொண்டு தடுத்து உள்ளதால் அந்தப் பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை அவசரமாக வரும் 108 ஆம்புலன்ஸ் திரும்பி செல்லும் நிலை உள்ளது.


மேலும் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறது எனவே உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் சாலையில் குறுக்கான தடுப்பை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
