BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பஸ் படியில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வர சொன்ன கண்டக்டருடன் வாக்குவாதம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதுபோன்ற பயணத்தினால் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகின்றது என கூறினாலும், எந்தவித அச்சமும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை புதுப் பாளையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்தது அதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சிலர் படியில் நின்று பயணம் செய்துள்ளனர். கண்டக்டர் அவர்களை உள்ளே வர சொல்லியுள்ளார். அப்பொழுது மாணவருக்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலையின் பெட்ரோல் பங்க் அருகில் வரும் பொழுது படியில் தொங்கியபடி வந்த மாணவர்களுக்கு, கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. அப்பொழுது மாணவர்களில் ஒருவர் கண்டக்டரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைகுறித்து உடனடியாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். தொடர்ந்து பஸ்சை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையம் முன் நிறுத்திவிட்டு டிரைவரும், கண்டக்டரும் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )