BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பரபரப்பு போலி இரிடியம் விற்க முயன்ற 5 பேர் கைது கூட்டு கொள்ளையில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

தஞ்சை அடுத்த சூரக்கோட்டை – மன்னார்குடி பிரிவு சாலையில் 5 பேர் கொண்ட கும்பல் பித்தளை பானையுடன் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் பித்தளைபானையுடன் தப்பி ஓட முயன்றனர்.


சந்தேகம் அடைந்த போலீசார் விரட்டி சென்று 5 பேரையும் மடக்கி பிடித்து தீவிர விசாரனை நடத்தினர். அதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருவரங்கத்தை சேர்ந்த கணேசன் (வயது 31), நெடுங்குளத்தை சேர்ந்த முனீஸ்வரன் (31), சின்னமுத்து (24), புதுமடம் வலக்சாபுரியை சேர்ந்த முனீஸ்வரன் (33), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கண்ணன் (32) என்பதும், ராமநாதபுரத்தில் இருந்து பித்தளை பானையுடன் தஞ்சை வந்ததும், பானை உள்ளே இரிடியம் உள்ளதாக கூறி 50 லட்சம் ரூபாய்க்கு பொதுமக்களிடம் விற்க முயன்றதும் தெரியவந்தது.

மேலும் கடந்த சில நாட்களாகவே இதனை விற்க முடியாததால் அடுத்த கட்டமாக கூட்டு கொள்ளையில் ஈடுபட திட்டம் போட்டதும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து போலி இரிடியம் வைத்திருந்த கணேசன் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )