மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடியில் 3 உலக சாதனைகள் நிகழ்வுகள்.

தேனி மாவட்டம் போடியில் நேற்று மூன்று விதமான உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. தேனி மாவட்டம் போடியில் பிச்சாங்கரை பகுதியிலிருந்து போடி வரை 10 கிலோ மீட்டர் தூரம் எட்டு விதமாக சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்த மாணவன் ஜனாநிதி என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் இசையும் இறையும் என்ற தலைப்பில் கடவுள் பாடல்கள் பாடி ஹரி சுந்தர் என்ற மாணவர் சாதனை செய்தும் பரதநாட்டியத்தில் ரித்திகாராமு என்ற மாணவி பாரதத்தில் பல்வேறு வகைகளில் தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு மேலாக ஆடி புதிய சாதனையும் படைத்தார் சாதனை படைத்த மூன்று சாதனையாளர்களுக்கும் Nobel world records சார்பாக சாதனையாளர் விருதினை வழங்கினர்.


இந்த உலக சாதனையாளர் விருது வழங்கும் விழாவானது போடி பரமசிவன் கோயில் உள்ள கலை அரங்கத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போடி நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும் சாதனைக்கான விருதினையும் வழங்கினார் இதுபற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நடுவர் ரஞ்சித் தெரிவிக்கையில் இதுபோன்ற சாதனைகள் இன்றும் உலக அளவில் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
