மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த புகார்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் உரிய முறையில் தீர்வு கிடைக்கவில்லை எனில் விரக்தி அடைந்து விடுகிறார்கள். இதனால் அந்தந்த துறையின் உயர் அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டு அதற்குண்டான தீர்வினை காண அறிவுறுத்தப்படுகிறது . அதை விடுத்து இவ்வுலகில் விலை மதிப்பற்றதாக போற்றப்படும் மனித உயிர்களை கெரோசின், பெட்ரோல் போன்ற பொருட்களை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு அரசுக் கட்டடங்களின் வளாகத்தின் உள்ளேயும், காவல் நிலையங்களின் முன்பும் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிப்பது சரியான தீர்வாகாது .
மேலும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படியான குற்றமாகும். ஆகவே இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராகிலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
