மாவட்ட செய்திகள்
திருச்சி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழா மாநகர மாவட்டம் சார்பில் விசிகாவினர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமேதை அம்பேத்கரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் விடுதலை கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் புல்லட்லாரன்ஸ் தலைமையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் தங்கதுரை, அரசு, பீர்முகமது, கனியமுதன், ஆல்பர்ட்ராஜ், காந்தி, தில்லைஅரசு, சந்தனமொழி, சிவ.தண்டபாணி, காந்தி, சதீஷ் பெல்சந்திரசேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.