மாவட்ட செய்திகள்
திருச்சியில் தனது கள்ளக் காதலுக்கு தூது செல்ல மறுத்த மகள் – கள்ள காதல் மோகத்தால் மகளுக்கு சூடு வைத்த கொடுர தந்தை கைது.

திருச்சி பாலக்கரை ரெயில்வே காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகவல்லி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு வர்ஷினி என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணகுமார் அவரது வீட்டின் அருகாமையில் வசிக்கும் திலகவதி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும் இரவு நேரங்களில் கைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொள்வதும் தொடர்ந்தது தன் கணவன் ஏதோ தவறு செய்வதாக சந்தேகம் ஏற்பட அவரது மனைவி கணவர் வீட்டில் இல்லாத போது அவருடைய செல்போனை எடுத்து சோதனை செய்ததில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதை கண்டறிந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய மனைவி கனகவல்லி கணவரை கண்டித்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தனது கள்ளக் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததால் தினந்தோறும் மது அருந்திவிட்டு மனைவியிடம் கிருஷ்ணகுமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அவரால் கள்ளக்காதலியை மறக்க இயலவில்லை.

இதற்கிடையே குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணகுமார் தனது மகள் வர்ஷினியிடம் திலகவதியையும் நம் வீட்டில் சேர்த்து கொள்வோம். அனைவரும் ஒன்றாக இருப்போம். உன் அம்மாவின் சம்மதத்தை பெற்று வா என கூறி உள்ளார். மகள் வர்ஷினி தந்தைக்கு தூது செல்ல மகள் மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் கத்தியை நெருப்பில் ஆடேற்றி மகளின் காலில் சூடு வைத்தார். சூடு தாங்காமல் மகள் அலறல் வீட்டிலிருந்து தப்பி சென்றார். சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து வெளியே சென்றிருந்த கனகவல்லி தெரிவிக்கவே மகளை திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கனகவல்லி பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற மகளுக்கு சூடு வைத்த கொடூர தந்தையின் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
