BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக நகர கழக சார்பில் கோவில்பட்டியில் அம்பேத்காரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மதிமுக நகர கழக சார்பில் நகரச் செயலாளர் பால்ராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் விநாயகர் ரமேஷ் முன்னிலையில் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் பவுன் மாரியப்பன், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் ராஜன், மாநில தீர்மானகுழு உறுப்பினர் முத்துச்செல்வன், மத்திய ஒன்றிய பகுதி செயலாளர் சரவணன், நகர மாணவரணி அமைப்பாளர் கார்த்திக், நகர மாணவரணி துணை அமைப்பாளர் கருப்பசாமி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமச்சந்திரன், நகர நெசவாளர் அணி அமைப்பாளர் குழந்தைவேலு நகர நெசவாளர் துணை அமைப்பாளர் ராமர்,வார்டு செயலாளர்கள் லியோ ஷெண்பகராஜ், நாகராஜன், ஆறுமுக பாண்டியன், ஆட்டோ பெருமாள், தாயகம் மாரிமுத்து, உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )