BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காரைக்காலில் தீயணைப்பு சேவை வாரம் அனுசரிப்பு.

1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் 1200 டன் வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் ட்ரம்களை சுமந்தபடி மும்பை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த கப்பல் மட்டும் இன்றி அருகில் இருந்த மற்ற கப்பல்களும் கட்டிடங்களும் தீக்கிரையானது. அதில் மும்பை துறைமுகத்தை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்களுடன் மொத்தம் 231 பேர் பலியானார்கள். இந்த துயர நிகழ்வின் நினைவாகத்தான் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதியை தீயணைப்பு சேவை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தீயணைப்பு சேவை வாரத்தை அனுசரிக்க ஏப்ரல் 14- தேதி முதல் 20 தேதி வரை அனுசரிக்கப்படுகிறது . இதன் தொடர்ச்சியாக பொருத்தமான முறையில் பொதுமக்களுக்கு தேவையான அவசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ஒரு தீ பாதுகாப்பு உணர்வை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பொதுமக்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு கட்டுரை போட்டி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இதன் தலைப்பாக தீ பாதுகாப்பை அறிவோம் என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்வு ஏப்ரல் 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் முதல் 2 மாணவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை அதிகாரி மாரிமுத்து அவர்கள் தெரிவித்தார்கள். காரைக்காலில் மொத்தம் 4 தீயணைப்பு வாகனங்களும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேதகு துணைநிலை ஆளுநர் மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு துறை அமைச்சர் ஆகியோரின் பரிந்துரையின் படியும் கோட்டத் தீயணைப்பு அதிகாரி மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின் படியும் இந்நிகழ்வு நடைபெறுகிறது.மேலும் பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பேனர்கள் மற்றும் நோட்டீஸ் போன்றவை அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )