BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோமா நிலையில் பேரணாம்பட்டு நகராட்சி -கண்டுக்கொள்ளாத ஆர்.டி. எம்.குபேந்திரன்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் பல்வேறு முறைகேடுகளும் ,தில்லாலங்கடி வேலைகளும் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக நகராட்சி அலுவலகத்தில் தனது உறவினர்களையும், நண்பர்களையும் சேர்த்து கொண்டு ஊர் கதையை பேசிக்கொண்டு மணிக்கணக்கில் பார்வையாளர்களை பார்க்காமல் கும்மாளம் போட்டு வருகிறார் மேலாளர் முரளிதரன். அரசு வாகனத்தில் தனது பெண் உறவினர்களை அமர்த்தி கொண்டு ஊரைச்சுற்ற கிளம்பிவிடுகிறார். என்றும் துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழு கூலியையும் தராமல் பாதிகூலியை கொடுத்துவிட்டு மீதமுள்ள பாதிகூலியை நகரமன்ற துணைத் தலைவர். ஜுபேரும் இன்னும் ஒருசிலரும் கூட்டுக்கொள்ளை அடித்து பங்குப் போட்டுகொள்வதாக கூறப்படுகிறது. இதனால் துப்புரவு பணி தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களின் சம்பளத்தை கொள்ளையடிப்பதை காட்டிலும் ஜுபேரும், துப்பரவு தொழிலாளர்களின் சம்பளத்தை பங்குபோட்டு கொள்ளும் மற்றவர்களும் சாக்கடையில் இறங்கி வேலை செய்துவிட்டு முழு சம்பளத்தையும் இவர்களே எடுத்துக் கொள்ளட்டுமே என்று பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர் தரப்பிலும் கூறப்படுகிறது. மேலும் மேலாளர் முரளிதரன் பல்வேறு தேவைகளுக்காக தன்னை பார்க்க வரும் நபர்களை முதலில் மாஸ்க்கை கழற்றுங்கள். பிறகு என்னிடம் பேசுங்கள் என்று கூறுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போன்றவர்களே மாஸ்க் அணியுங்கள். கொரோனாவை தடுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால் மேலாளர் முரளிதரனோ என் அறை உள்ளே வருபவர்கள் மாஸ்க்கை கழற்றிவிட்டு வாருங்கள் என்று தனது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். சொறிநாய்க்கூட அது இருக்கும் பக்கம் சென்றால் குரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கு பொருத்தமான உதாரணமாக உள்ளது. மேலாளர் முரளிதரனும் அதுபோன்று திகழ்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக நகராட்சி வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசலை நகராட்சியில் உள்ள முக்கிய அதிகாரிகள், ஒருசில ஊழியர்கள் தங்களின் சொந்த வாகனங்களுக்கும் பெட்ரோல், டீசலை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறப்படுகிறது. இவ்வளவு அக்கிரமும், அநியாயமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஆர். டி.எம்.குபேந்திரனுக்கு வாய்மொழியாகவோ, கைப்பேசி மூலமாகவோ புகார் கூறினால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் சொல்லுவதை மட்டுமே வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளாரே தவிர செயல்முறையில் உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாத வெங்காயம்போல் உள்ளது குபேந்திரனின் செயல்பாடுகள். இதுக்குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு நகராட்சியை நேரில் ஆய்வு செய்தால் பல தில்லுமுல்லு வேலைகள் அம்பலத்துக்கு வரும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும். உள்ளாட்சித் துறை அமைச்சராவது பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தால் பலர் சிக்குவது உறுதி என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள். திமுக அரசு சாட்டையை சுழற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )