மாவட்ட செய்திகள்
திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு செல்லும் உப்பு சத்தியாகிரக போராட்ட நினைவுப் பாதை யாத்திரை இன்று 4 வது நாளாக நடைபெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சியில் உப்புக்கு வரி விதித்தபோது மகாத்மா காந்தி தலைமையில் தண்டி உப்பு சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து பாதயாத்திரையாக சென்று வேதாரண்யம் கடற்கரையில் உப்பு எடுக்கும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
இதனை நினைவு கூறும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் கடந்த 13ஆம் தேதி உப்பு சத்தியாகிரக போராட்டம் நினைவு பாத யாத்திரை தொடங்கியது இந்த பாதையாத்திரை 4 வது நாளான இன்று தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பவனமங்கலம் கூத்தூர் ஆகிய கிராமங்கள் வழியாக சென்றது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கேவி தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரையாக வந்தனர்.
இன்று இரவு திருவையாறு சென்றடையும் இக்குழுவினர் நாளை திருவையாறில் இருந்து 4-வது பாதயாத்திரையை தொடங்குகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.