BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் தேசிய நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் இரண்டு வாரங்களாக சமூக உயர்வுக்கான வாரங்களாக கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையை கையில் எடுத்து கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர் இன்று தமிழகம் முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய நலவாரிய அட்டை நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் வழங்கப்பட்டது.


மேலும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து பயனாளிகள் கலந்து யோசித்து மேலும் அவர்களின் தேவை அறிந்து கொள்ளும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் இருமொழிக் கொள்கை என்பது தமிழக மக்களை ஏமாற்றுகின்ற ஒரு கொள்கை இருமொழி கொள்கை என்பது திமுக வாடிக்கையாக அரசியலுக்கு பயன்படுத்துகிற ஒரு வாசகம் திமுக மக்களை ஏமாற்றும் ஒரு செயலாக பயன்படுத்தி வருகிறது என குற்றம்சாட்டினார்.இந்நிகழ்ச்சியில்பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )