மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக முப்பெரும் விழா.

திண்டுக்கல் மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக தேசத்தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 112வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, எழுச்சித்தமிழர் விருது விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.தொகுதி செயலாளர் மைதீன் பாவா தலைமையில் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பரசு கொடியேற்றி சிறப்புரை யாற்றினார். இதில் சாதி ஒழிப்பு கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய கழக போராளிகளுக்கு எழுச்சித்தமிழர் மணி விழா விருது, ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைச்செயலாளர் திருச்சி சித்தன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ் ,ஸ்வீட் ராஜா, பெர்னா, யுவராஜ், ஹைதர் அலி, காளிதாஸ் ,செல்வா ஆனந்த்,மரியராஜ், பிரஷாந்த் ,நாகூர் மைதீன், வின்சென்ட் மற்றும் இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக திராவிட கழக மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் ஆனந்த், தொழிலதிபர் மரக்காயர் சேட், கிறிஸ்துவ சேனை அமைப்பாளர் ஜான் போஸ்கோ ,சர்வதேச பயிற்சியாளர் பால் சுசில் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
