BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.

தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா”வை ஒட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடந்த புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தஞ்சை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா – ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை கொண்டாடும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்கக் கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி அரங்குகள் மூலமாக ஒவ்வொரு துறையும் தங்கள் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளனர். ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்தவர்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களையும் இதன்மூலம் பயனடைவதற்கான வழிமுறைகளையும் குறித்து தெரிந்து கொள்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் வாயிலாக பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்த தியாகிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தேசிய மற்றும் மாநில அளவிலான சுதந்திரப் போராட்ட தியாகிகளுடன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி அரங்குகள் மூலம் முதல்வரால் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், இக்கண்காட்சியை பார்வையிட வருகை தரும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்தும் தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களின் குறைகளை தீர்க்க இயலும். லரும் 22ம் தேதி வரை ஒருவாரத்திற்கு நடக்கும் இக்கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும். இவ்வறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் திரு.சண்..இராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )