மாவட்ட செய்திகள்
திருச்சி பாஜகவின் கட்சியின் கைப்பாவையாக கவர்னர் செயல்படும் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் – லோக் தந்திரிக தல மாநில தலைவர் ராஜகோபால்.
லோக் தந்திரிக தல மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வையாபுரி, அறிவழகன், ஆறுமுகம், ராஜன் செல்லப்பா, வழக்கறிஞர் சரவணன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைத்து மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதா உட்பட்ட பல்வேறு கோப்புகளை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கதக்கது. மேலும் சட்டமன்றத்துக்கு அந்த கோப்பை அனுப்பினால் அது சட்டமன்றத்திற்கு உரிய பொருளாகும் இது குறித்து கவர்னர் அறிக்கை வெளியிடுவது தவறான செயல் பாஜகவின் கட்சியின் கைப்பாவையாக கவர்னர் செயல்படும் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.
மத்திய மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்.
ஏய்ம்ஸ் தொடர்பான ஆலோசனைக் குழுவில் ஒரு பெண் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் சுப்பையாவை தலைவராக வைக்கக்கூடாது அவரை உடனே குழுவில் இருந்து நீக்க வேண்டும்.
ஹிந்து சமய அறநிலை துறை சார்பாக வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.