மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே வாலிபரை கொல்ல ஆட்டோவில் வந்த பல்வேறு கொலை வழக்கில் உள்ள இளைஞர்கள் உள்பட 6பேர் கைது.
நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் அஜித் வயது 27. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் வயது 25. இவர்கள் சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்குள் மதுரையைச் சேர்ந்த குரு என்ற குமரகுரு வயது 28. என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நெருங்கி நண்பர்களாக பழகி வந்தனர். அவ்வாறு பழக்கத்தில் இவர்கள் ஒன்றாக மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அஜித்துக்கும் குரு என்ற குமரகுருவிற்கும் ஏற்பட்ட தகராறு முன் விரோதமாக மாறியது. இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்ட குரு என்ற குமரகுரு அஜித்தை பழிவாங்கும் நோக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குல்லிசெட்டிபட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவில் அருண்குமார் தீச்சட்டி எடுக்க இருப்பதாகவும், அதனால் கிடா வெட்டு விழா இருக்கிறது என குரு என்ற குமரகுரு மற்றும் அவரது நண்பர்களை திருவிழாவிற்கு அழைத்து உள்ளார். திருவிழாவிற்கு வந்த குரு என்ற குமரகுரு தனது நண்பர்களுடன் அஜீத்யை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் விழாவில் தேடியும் அலைந்து உள்ளார்கள். ஆனால் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அஜீத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் நேற்றுமுன்தினம் மதியம் சுமார் 1மணி அளவில் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டு ஒரு கும்பல் கையில் வீச்சரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து அங்கு நின்ற கார் மற்றும் பைக் மற்றும் சேர் இதரப் பொருட்களை அடித்து வீடுகளையும் பீர் பாட்டில்களை வீசி சேதப்படுத்தினார்கள். அப்போது அஜித் வீட்டில் இல்லாததால் இதனால் கிராம மக்கள் ஆங்காங்கே இருந்தவர்கள் திரண்டு ஓடி வந்ததால் வந்த ஆட்டோவில் மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆவேசம் மற்றும் பயம் ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உடனடியாக கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி முன்னிலையில் ஒரு தனிப்படை போலீசார் முத்துப்பாண்டி முனீஸ்வரன் அலெக்ஸ்அமைக்கப்பட்டு முதலில் அருண் குமார் மற்றும் சஞ்சய் ஆகிய 2 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.அதனைத் தொடர்ந்து குரு என்ற குமரகுருவின் செல் நம்பரை வைத்து உடனடியாக மதுரை தத்தநேரி பகுதிக்குச் நிலக்கோட்டை அருகே நடந்த கார் மற்றும் பைக் ஆட்களை அடித்து நொறுக்கிய இளைஞர்களை செல்போன் எண்களை வைத்து மடக்கிப் பிடித்தனர். விசாரித்தபோது மதுரை, தத்தனேரி யை சேர்ந்தவர்கள் செல்வம் மகன் பிரசாத் என்ற பிடி வயது 24, அபுதாகூர் மகன் இப்ராகிம் வயது 25, சுப்பிரமணி மகன் கல்யாணசுந்தரம் வயது 27, பாலசுப்பிரமணி மகன் இளையராஜா வயது 24, ஆகிய 4 பேர்களையும் தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனர். கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்த இளைஞர்கள் மதுரை மற்றும் மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கில் ஈடுபட்டு ஏற்கனவே பல தடவை சிறைச்சாலைக்குச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் மற்றும் தனிப்படை போலீசாரை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன், நிலக்கோட்டை துணை சூப்பிரண்டு போலீஸ் சுகுமாரன், மற்றும் கிராம மக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இருப்பினும் கிராமத்தில் தற்போது வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான குரு என்ற குமரகுரு சென்னைக்கு தப்பி சென்று விட்டதாகவும் அங்கே போலீஸ் விரைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
படவிளக்கம்: அருண்குமார், சஞ்சய்,
படவிளக்கம் 2: கைது செய்யப்பட்ட மதுரையைச் சேர்ந்த தத்தனேரி இளைஞர்களையும், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் மற்றும் போலீசாரை படத்தில் காணலாம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.