BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தெருநாய்கள் கடித்து குதறியதால் புள்ளிமான் பலி!

காட்பாடி அருகே இடையகுப்பம் காப்பு காட்டில் தீ  காரணமாக புள்ளிமான் மலையில் இருந்து வந்தது .அதனை  தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது.
வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று நேற்று காலை அப்பகுதியில் சுற்றி வந்தது. இந்நிலையில் அதனைக் கண்ட தெரு நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் மான் பலத்த காயமடைந்து. இதையடுத்து புள்ளிமான் சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதுபோன்று பொன்னை சுற்றுவட்டார  காப்புக்காடு பகுதியில் மர்ம நபர்கள் தீ வைப்பதனால் வனவிலங்குகள் ஊர் பகுதிக்கு வந்து தெரு நாய்களிடம் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. காப்புக்காடு பகுதியில் தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )