மாவட்ட செய்திகள்
தீ தடுப்பு வாரவிழா.

தீ தடுப்பு வாரவிழாவை முன்னிட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை அதிகாரி வெங்கடரமணன் அறிவுறுத்தல்படி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ அல்லது தங்களின் வீடுகளிலோ மின் கசிவினால் அல்லது விபத்தினால் திடீரென
ஏற்படும் தீயை எந்தவித அச்சமும் இன்றி அணைப்பது குறித்தும் அலுவலக பணியாளர்களுக்கு நிலக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அலுவலர் ஜோசப் அவர்களின் தலைமையிலான தீயணைப்புத்துறையினரால் செயல்முறை விளக்கம், விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
